அந்த படத்தை ஓ.டி.டியில் வெளியிட்டது என்னுடைய தவறான முடிவு - நடிகர் சூர்யா

2 months ago 11

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, ஜெய் பீம் படத்தை ஓ.டி.டியில் வெளியிட்டது தவறு என்று கூறியுள்ளார். இது குறித்து சூர்யா கூறுகையில்,

'சிவா இயக்கிய 'அண்ணாத்த' படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்திருந்தேன். அப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, 'ஜெய் பீம்' படத்துக்கான டிக்கெட்டுகளைப் பற்றி ஒரு முதியவர் விசாரித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம், 'ஜெய் பீம்' படம் திரையரங்கில் வெளியாகவில்லை. ஓ.டி.டியில்தான் வெளியாகியுள்ளது என்றேன், ஆனால், அவரால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அப்போது, 'ஜெய் பீம்' படத்தை ஓ.டி.டியில் வெளியிட்டது என்னுடைய தவறான முடிவு என்று தோன்றியது. ஓ.டி.டியில் வெளியானதால் அனைத்து பார்வையாளர்களையும் அது சென்றடைய முடியவில்லை' என்றார். 'ஜெய் பீம்' படம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article