அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

5 hours ago 2

மும்பை.

போர் பதற்றம் காரணமாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைப்பும் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, 916 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 924 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 ஆயிரத்து 975 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 429 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

1 ஆயிரத்து 787 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 516 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 537 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 995 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 497 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 ஆயிரத்து 32 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 133 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read Entire Article