அதிமுக கூட்டம்

2 weeks ago 2

வத்தலக்குண்டு, ஜன. 23: வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு மோகன், மேற்கு பாண்டியன் தலைமை வகித்தனர். நகர செயலாளர் பீர் முகமது, முன்னாள் எம்பி உதயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்மதி முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். எம்எல்ஏ தேன்மொழி சேகர் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்ஜிஆரின் சிறப்புகள் குறித்து பேசினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் ஜான் நன்றி கூறினார்.

The post அதிமுக கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article