அதிதி ஷங்கரின் தெலுங்கு அறிமுக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

4 hours ago 1

சென்னை,

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது இவர், தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். விஜய் கனகமெடலா இயக்கும் 'பைரவம்' படத்தில் அவர் நடித்துள்ளார். இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இது தமிழில் வெளியான 'கருடன்' படத்தின் ரீமேக்காகும்.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

This summer, it is going to be a with action, emotions and brotherhood ❤#BHAIRAVAM IN CINEMAS WORLDWIDE ON MAY 30th @HeroManoj1 @IamRohithNara @DirVijayK @AditiShankarofl @anandhiactress @DivyaPillaioffl @KKRadhamohan @dopharipic.twitter.com/Vw1wwX6L66

— Bellamkonda Sreenivas (@BSaiSreenivas) May 9, 2025
Read Entire Article