அதிகாலை கொட்டும் பனி; பகலில் கொளுத்தும் வெயில்: வளிமண்டலத்தை ஊடுருவும் காற்றே காரணம்: வானிலை மையம்!!

2 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து இருக்கும் நிலையில், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருகிறது. தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவை கொடுத்த வடகிழக்கு பருவமழை விடைபெற்ற பிறகு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரவிலும், அதிகாலையிலும் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என கூறியுள்ளது. இதற்கு வறண்ட காற்றின் ஊடுருவலே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பருவநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலும் பிப்ரவரி மாதத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் சம்பா, தாளடி பருவ வேளாண்மையை விவசாயிகள் அச்சமின்றி மேற்கொள்ளலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post அதிகாலை கொட்டும் பனி; பகலில் கொளுத்தும் வெயில்: வளிமண்டலத்தை ஊடுருவும் காற்றே காரணம்: வானிலை மையம்!! appeared first on Dinakaran.

Read Entire Article