அதிகாரிகளின் அலட்சியம் சீரமைக்கப்படாத பாலம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

3 months ago 14

கலபுர்கி மாவட்டம், சேடம் தாலுகா, குக்குந்தா கிராமம் அருகே காகினா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல மாதங்கள் கடந்தன. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்கள் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர். ஆகஸ்ட் மாதம் பெய்த தொடர் மழை மற்றும் காகினா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குக்குந்தா கிராமத்தின் கோ.பேரேஜ் பாலத்தில் இருந்த சிமென்ட் தூண்கள் மற்றும் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது.

மேலும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டு பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பாலத்தின் மீது செல்லும் பயணிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது என கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சம்பண்ணா பூத்புரா கவலை தெரிவித்தார். பள்ளிகளுக்கு ஆட்டோவில் செல்ல மாணவர்கள் இந்த வழியையே நம்பியுள்ளனர். இந்த பாலத்தை பலரும் நம்பியுள்ளனர் எனவே, பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும்’ என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அதிகாரிகளின் அலட்சியம் சீரமைக்கப்படாத பாலம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article