அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து வெப்சைட்டில் வெளியீடு: வாலிபர், இளம்பெண் கைது

1 day ago 5

திருமலை: கால்சென்டரில் ஸ்டூடியோ வைத்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி இளம்ெபண்களை நிர்வாண வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்த வாலிபரும், இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் காகுளம் ஓல்டு டவுன் பகுதியை ேசர்ந்தவர் கணேஷ் (30). இவரது தோழி ஜோஸ்னா (26). இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களுக்கு அங்கு அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் பகுதியில் கால்சென்டர் நடத்தி வரும் லூயிஸ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் மூவரும் எளிய வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர்.

அப்போது லூயிஸ், பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதனை கணேஷ் மற்றும் ேஜாஸ்னா ஏற்றுக்கொண்டனர். லூயிஸ் திட்டப்படி தனது கால்சென்டருக்கு வரும் பெண்களிடம் கணேஷ் மற்றும் ஜோஸ்னாவை வரவழைத்து இருவரும் நட்பாக பேசி அவர்களது குடும்ப சூழல்களை அறிந்துகொண்டனர். அதில் வறுமையில் உள்ள இளம்பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக்கூறியுள்ளனர்.

பின்னர் கால்சென்டருக்குள் ஸ்டூடியோ வைத்து அந்த இளம்பெண்களை அழைத்து வைத்து நள்ளிரவில் நிர்வாண வீடியோக்களையும் சில பெண்களை லைவ் நிர்வாண வீடியோக்களையும் எடுத்துள்ளனர். இதற்காக அந்த பெண்களுக்கு சிறு தொகையை கொடுத்துள்ளனர். அந்த வீடியோக்களை ஆபாச வலைத்தளத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர சைபர் பாதுகாப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் நேற்று குண்டக்கல்லில் உள்ள கால்சென்டருக்கு சென்று கணேஷ் மற்றும் ஜோஸ்னாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப வறுமை மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளம்பெண்களை குறி வைத்து அவர்களை மயக்கி தங்கள் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து நிர்வாண வீடியோ எடுத்ததும், இதற்காக அவர்களுக்கு சில ஆயிரங்களை மட்டுமே கொடுத்ததும் ெதரியவந்தது.

மேலும் தாங்கள் எடுத்த வீடியோவை தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் கணேஷ், ஜோஸ்னா ஆகிய இருவரும் ரூ.16 லட்சமும், லூயிஸ் ரூ.11 லட்சமும் சம்பாதித்துள்ளனர். இப்பணத்தை வெளிநாட்டில் இருந்து கிரிப்டோகரன்சியாக பெற்றதும் தெரிந்தது. அந்த ஸ்டூடியோவில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து கணேசையும், ஜோஸ்னாவையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான லூயிசை தேடிவருகின்றனர்.

The post அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து வெப்சைட்டில் வெளியீடு: வாலிபர், இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article