அதானி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற கூட்ட தொடரில் குரல் எழுப்புவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

2 months ago 10

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் அதிக விலை சோலார் உற்பத்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக கவுதம் அதானி மற்றும் அவரது 7 கூட்டாளிகள் ரூ.2000 கோடி லஞ்ச திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். மோடி அதானி உறவு குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல கேள்விகளை எழுப்பி இருந்தும் எந்த ஒரு தெளிவான பதிலும் ெதரிவிக்கவில்லை. அதானி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிச்சயம் குரல் எழுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், செய்தி தொடர்பாளர் திருச்சி, காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அதானி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற கூட்ட தொடரில் குரல் எழுப்புவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article