அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர்: எஸ்.வி.சேகர் பேட்டி

1 hour ago 2

சென்னை,

சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ, ஈ.டபிள்யூ.எஸ். (EWS) கொண்டு வருகிறார்களோ, பிராமணர் நல வாரியம் ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார்களோ அது திமுகவாக இருந்தாலும் நான் திமுகவிற்காக பரப்புரை செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன்; நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் சமூகத்திற்காக பேசுகிறேன். எந்தவொரு காரணத்தையும் வைத்து அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது, அயோக்கியத்தனமான செயல்.

அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் நாற்பதற்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும்; அண்ணாமலை பாஜக மாநில தலைவராவதற்கு தகுதியில்லை என கூறினார்கள், ஆனால் அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர்; தற்போது படிக்க சென்றுள்ளார், ஆனால் அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். பாஜகவில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை தான் நடக்கிறது.

பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என தெரிந்து கொண்டு போக வேண்டும். நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article