
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பி.இ., பி.டெக், பி.பிளான் பட்டப்படிப்புக்கான, வெளி மாநில மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
மாநில மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வருகிற 11-ந்தேதி முதல் சமர்பிக்கலாம் என அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்கள் சமர்பிக்க வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது