சென்னை: சென்னை அண்ணா சாலையில் நேற்று தனியார் சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாந்தோம் டுமிங் குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மாணவியின் ஆண் நண்பரை ஆகாஷ் தினமும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது குறித்து மாணவி கேட்டபோது தாக்குதல் நடத்தி உள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post அண்ணா சாலையில் நேற்று தனியார் சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் கைது appeared first on Dinakaran.