
சென்னை,
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். இது அட்லீயின் 6-வது படமாகும். அதேபோல், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இப்படத்தை இயக்க உள்ளதால் இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆனால் இப்படம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தநிலையில், இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அறிவிப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது.