
சென்னை,
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'வேதாளம்'. அதில் ஸ்ருதிஹாசன், சூரி, லட்சுமி மேனன், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் அஜித் குமாருக்கு தங்கையாக நடிக்க முதலில் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி (டிடி) தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் வெளிப்படையாக திவ்ய தர்ஷினி பேசியுள்ளார். அதாவது, "2014-ல் எனக்கு 'வேதாளம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது எனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதனால் தான் வேதாளம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். ஆனால் அது அஜித் சாரின் படம் என்பது முதலில் எனக்கு தெரியாது. அதன்பின் தான் எனக்கு தெரிய வந்ததது." என்று கூறியுள்ளார்.
