
மும்பை,
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் 2015-ல் 'திரிஷ்யம்' என்ற தலைப்பிலேயே வெளியான இப்படம் நல்ல வசூல் பார்த்தது. அதில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் 2018-ல் 'திரிஷ்யம் 2' வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து தற்போது, திரிஷ்யம் 3 படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, அஜய்தேவ்கன் திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். முதல் 2 பாகத்தை இயக்கிய அபிஷேக் பதக், மூன்றாம் பாகத்தையும் இயக்க உள்ளார். டிஜிட்டல் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.