
மதுரையை சேர்ந்த முருகன் மகள் பூங்கொடி (வயது 31). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து பூங்கொடி உறவினர் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது கோவில்பட்டி அருகேயுள்ள விஜயாபுரி நடுத் தெருவை சேர்ந்த ஜெய்கணேஷ்(35) என்பவருடன் நெருங்கி பழிகியுள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபுரிக்கு வந்து, இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனவேதனையடைந்த பூங்கொடி விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.