அகத்தியா படத்தின் 'செம்மண்ணு தானே எங்க சாமி' பாடல் வெளியீடு

2 weeks ago 6

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்த படம் வரும் 31ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 'செம்மண்ணு தானே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

The heart of the land, the soul of our culture Listen to #SemmannuDhaane now! It's time to embrace the beauty of farming and culture. #Aghathiyaa Coming Soon.https://t.co/QS1mLAQ9NO@IshariKGanesh @VelsFilmIntl @WamIndia @aghathiyaa @JiivaOfficial @akarjunofficialpic.twitter.com/lG1UYv5bXG

— Vels Film International (@VelsFilmIntl) January 24, 2025

 

Read Entire Article