7ம் வகுப்பு மாணவிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

3 hours ago 1

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டம் கலிபேலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் ஜோதி (வயது 13), மந்திரா (வயது 13) ஆகிய இரு சிறுமிகள் 7ம் வகுப்பு பயின்று வந்தனர்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து 2 மாணவிகளும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாயமான மாணவிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் 2 மாணவிகளும் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read Entire Article