சாண்டியாகோ,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. அந்நாட்டின் நுபல், மவுலி ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப்படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது.
இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக நுபல், மவுலி ஆகிய 2 மாகாணங்களிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, காட்டுத்தீயை பற்ற வைத்ததாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.