#Ghiblified

2 days ago 2

எது எப்போது டிரெண்டாகும் என இணையவெளியில் நாம் கணிக்கவே முடியாது. அப்படித்தான் திடீரென ‘Ghibli Image’,‘Ghiblified’, என பலரும் தங்களது ஒரிஜினல் புகைப்படத்தைக் கொண்டு கார்ட்டூன், அல்லது அனிமி பாணியில் புகைப்படங்களாக மாற்றி வைரலாக்கி வருகிறார்கள். இதில் இந்தியப் பிரதமர் துவங்கி சமீபத்திய ‘எல்2: எம்புரான்‘ படக்குழு உட்பட அடக்கம். சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில் நம் புகைப்படத்தைக் கொடுத்து “Turn this image into a Studio Ghibli-style portrait” என டைப் செய்தால் கனப்பொழுதில் நம்முடைய புகைப்படத்துக்கு அச்சு அசலாக ஒரு கார்ட்டூன் புகைப்படம் வந்து விழுகிறது. ChatGPT யில் இந்த வசதி பெற ப்ரீமியம் பெற்றிருக்க வேண்டும். அதன் விலை ரூ. 2000. என்கையில் இதே வசதியை X. Com, Remini உள்ளிட்ட செயலிகள் இலவசமாகவே தருகின்றன. எனினும் ChatGPT அளவுக்கு அவ்வளவு துல்லியமான ரிசல்ட் கிடைக்கவில்லை. சென்ற இரண்டு வாரங்களாக டிரெண்டிங் இந்த Ghibli ஸ்டைல் புகைப்படங்கள் தான். அதிலும் கன்னட பிரபல படமான ‘சப்த சாகரதசே இலொ’ படத்தின் டைட்டில் டிராக் வீணை இசையுடன் எங்கும் ரீல்ஸ்களும் இந்த ஜிப்லி புகைப்படங்களின் தொகுப்புகள் அழகிய நினைவுகளை சந்தோஷமாக தாங்கி சுற்றுகின்றன. ‘ஏன்பா எனக்கு இந்த புகைப்படம் யாராவது செய்து கொடுங்களேன்’ என்பதாகவும் போஸ்ட்கள் நம்மை ஈர்க்கின்றன. அதில் எப்படி இந்த புகைப்படங்களைப் பெறலாம், எப்படி இலவசமாகப் பெறலாம், அதென்ன ஜிப்லி என பல வீடியோக்கள் டிரெண்டிங்கில் உள்ளன.

The post #Ghiblified appeared first on Dinakaran.

Read Entire Article