8வது சம்பளக்கமிஷன் வந்தால் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 186% உயரக்கூடும்: அதிகபட்சமாக ரூ.3.57 லட்சம் வரை கிடைக்கும்

2 weeks ago 2

புதுடெல்லி: அடுத்த ஆண்டு 8வது சம்பளக்கமிஷன் அமல்படுத்தப்பட்டால் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 186 சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த தற்போது 8வது சம்பளக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை அடைப்படையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒன்றிய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பென்ஷனும் உயர்த்தப்படுகிறது.

ஒரு கோடிக்கும் அதிகமான ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அலவன்ஸ்களைத் திருத்தும் பணி நடைபெறும். குறிப்பாக 8வது சம்பளக்கமிஷனில் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 186% உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடிப்படை சம்பளத்துடன் 2.86 சதவீதம் அதிகரிக்கப்படும். 7வது சம்பளக்கமிஷனில் 2.57 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 8வது சம்பளக்கமிஷனில் அதிகரிக்கப்படும் புதிய விகிதத்தால் ஒன்றிய அரசில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.25,740 கிடைக்கும். அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,25,000 பெறுபவர்ளுக்கு மாதந்தோறும் ரூ.3,57,500 கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The post 8வது சம்பளக்கமிஷன் வந்தால் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 186% உயரக்கூடும்: அதிகபட்சமாக ரூ.3.57 லட்சம் வரை கிடைக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article