மானாமதுரை, பிப். 8: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகிற 11ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக மானாமதுரை வட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வந்தனர். இந்நிலையில் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள இங்குள்ள முருகன் கோயிலில் கூடி, சிறப்பு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். பின் நேற்று காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். அதே போல வாகுடி, அன்னியேந்தல், இடைக்காட்டூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் பழநிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.
The post பழநிக்கு மானாமதுரையிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை appeared first on Dinakaran.