
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாகீர் கான் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஜாகீர் கான். நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.