70 வயதடைந்த ஓய்​வூ​தி​யர்​களுக்கு கூடு​தல் ஓய்​வூ​தி​யம் கோரி ஓய்​வூ​தி​யர்​ சங்கத்தினர் ஆர்ப்​பாட்​டம்

4 weeks ago 4

சென்னை: எழுபது வயதை எட்டிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நேரத்தில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்; எழுபது வயதடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கப்படாத சத்துணவு - அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர், வனத்துறையினர், ஊராட்சி எழுத்தர், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை நீக்கி, அனைத்து காப்பீட்டு முறையீடுகளுக்கும் விரைவில் செலவுத்தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், சென்னை நந்தனம் கருவூல ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read Entire Article