7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 சிறுவர்கள்

3 months ago 16

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை பகுதியில் சிலர் வந்து சென்றதாக கூறப்பட்டது. இதனை அறிந்த பெற்றோர், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி பள்ளியில் விசாரணை நடத்தினார்.

அப்போது கழிப்பறை சென்ற 7-ம் வகுப்பு மாணவிக்கு 2 சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அடையாளம் தெரியாத 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பள்ளி விளையாட்டு ஆசிரியை, வகுப்பு ஆசிரியை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்தது தொடர்பாக எழுத்து பூர்வமாக தலைமை ஆசிரியரிடம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article