சென்னை,
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவிற்கு மரியாதை கொடுக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;-
"அமெரிக்க குடிமக்களாக இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து சட்டப்பூர்வமாக, முறைப்படி இந்திய அகதிகள் வெளியேற்றப்பட்டால் அவர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஒரு புது விதமான அரசியலை முன்னெடுத்துள்ளார். ஒரே நாளில் பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்தும், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியுள்ளது.
அதே சமயம், டிரம்ப் அரசு இந்தியாவிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறது என்பது முதல் நாளிலேயே தெரியவந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் முதல் முதலாக சந்தித்த மற்றொரு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்தான்.
எனவே, சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் தாண்டி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத அளவிற்கு இந்தியா, அமெரிக்காவின் உறவு இருக்கும் என்பது எனது நம்பிக்கை."
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.