55 மதுபாட்டில் பறிமுதல் கந்தர்வகோட்டை பகுதியில் பழனி பாதயாத்திரை குழுவினர் மாலை அணிந்து விரதம்

4 months ago 11

 

கந்தர்வகோட்டை, ஜன.7: பழனிக்கு தைமாதத்தையொட்டி பாதயாத்திரையாக செல்லும் கந்தர்வகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் மாலை அணிந்துவிரதம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள முருகபக்தர்கள் ஆண்டுதோறும் தைபூசத்தன்று பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வார்கள். தஞ்சை சாலையில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து பாதையாத்திரை செல்வது வழக்கம். இவ்வாண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த பழனி முருக பக்தர்களான பாதயாத்திரை குழுவினர் தஞ்சை சாலையில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் நேற்று மாலை அணிந்து கொண்டனர். அதன்படி பழைய கந்தர்வகோட்டை ராஜமாணிக்கம் குருசாமி தலைமையில் கன்னிசாமிகளும், மலைசாமிகளும் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

The post 55 மதுபாட்டில் பறிமுதல் கந்தர்வகோட்டை பகுதியில் பழனி பாதயாத்திரை குழுவினர் மாலை அணிந்து விரதம் appeared first on Dinakaran.

Read Entire Article