₹5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

3 months ago 9

திருச்செங்கோடு, பிப்.5: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து, விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் விவசாயிகள் 110 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹5399 முதல் ₹7769வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ₹2.33லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. இதேபோல், 31 எள் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். கருப்பு எள் கிலோ ₹136 முதல் ₹172.90 வரையிலும், சிவப்பு எள் ₹109 முதல் ₹141 வரையிலும் வெள்ளை எள் ₹112.90 வரை ஏலம் போனது. இதில் 31மூட்ைட எள் ₹2.70லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article