49வது லீக் போட்டியில் இன்று பஞ்சாப் அணியை வென்று வஞ்சம் தீர்க்குமா சென்னை?

2 weeks ago 3

* சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
* இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
* அவற்றில் சென்னை 16, பஞ்சாப் 15 போட்டிகளில் வென்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை 240, பஞ்சாப் 231 ரன் விளாசி இருக்கின்றன.
* குறைந்தபட்சமாக சென்னை 120, பஞ்சாப் 92 ரன் எடுத்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பஞ்சாப் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* சென்னை கடைசியாக மோதிய 5 போட்டிகளில், 4ல் தோல்வி, ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
* பஞ்சாப் கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி பெற்றது. ஒரு போட்டி டை ஆனது.
* சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இந்த அணிகள் இதுவரை மோதிய 8 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வென்று சமபலத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன.
* ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை விளையாடி 9 லீக் ஆட்டங்களில் 5ல் வெற்றி கண்டு அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது.
* தோனி தலைமையிலான சென்னை இதுவரை விளையாடிய 9 லீக் போட்டிகளில் 2ல் மட்டுமே வென்று, வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
* முல்லன்பூரில் ஏப்.8ம் தேதி நடந்த 22வது லீக் ஆட்டத்தில் டோனி வழிகாட்ட ருதுராஜ் தலைமையில் ஆடிய சென்னை, 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் கடுமையாக போராடி தோற்றது. அதற்கு பழிவாங்கும் வகையில், இன்று சென்னை அணி வியூகம் அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

The post 49வது லீக் போட்டியில் இன்று பஞ்சாப் அணியை வென்று வஞ்சம் தீர்க்குமா சென்னை? appeared first on Dinakaran.

Read Entire Article