48-வது புத்தகக் கண்காட்சி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

6 months ago 20

சென்னை,

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த நிலையில், 4நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியில் கல்லூரியில் 48 வது புத்தக கண்காட்சியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார். மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் திறந்துவைத்து பார்வையிட்டார்.

 

Read Entire Article