சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டத்தில், கட்டி முடித்து 4 ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசு போக்குவரத்து கழக பணிமனை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சித்ரதுர்காவை தவிர, ஹிரியூர் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. பீதர்-ஸ்ரீரங்கப்பட்டணா, புனே-பெங்களூரு ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய இடமாகும். சல்லகெரே மற்றும் ஹோசதுர்கா தாலுகாக்களில் போக்குவரத்து ஏஜென்சி பணிமனைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
ஆனால், அமைச்சர்களின் தொகுதி என்று அழைக்கப்படும் ஹிரியூரிக்கு கே.எச்.ரங்கநாத், டி.மஞ்சுநாத், டி.சுதாகர் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பணிமனையை திறக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மாநகரில் உள்ள ஹூளியாறு ரோட்டில், கடந்த 2022 ஜூன் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
அரசு சாலை போக்குவரத்து கழக பிரிவு (டிப்போ) பணிமனையை துவங்க, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் போராடி வந்தாலும், இதுவரை திறப்பு விழா நக்கவில்லை. கடந்த 1998ல் புதிய கேஎஸ்ஆர்டிசி பணிமனை திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் பிஜிஆர், பணிமனையை துவக்கி வைக்க வலியுறுத்தினார். தொடர்ந்து, 2010ம் ஆண்டு, எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சியில் அமைச்சராக இருந்த டி.சுதாகர், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஆர்.அசோக்கை அழைத்து வந்து, ஹூலியார் ரோட்டில் உள்ள தாலுகா திடல் அருகே போக்குவரத்து கழக பணிமனைக்கு பூஜை செய்தார். அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், பணிமனை கட்டும் பணி முடங்கியது.
தொடர்ந்து, 2017ல், பூர்ணிமா ஸ்ரீனிவாஸ் எம்எல்ஏவாக இருந்தபோது, தாலுகாவில் உள்ள பட்ரேஹள்ளி அருகே அடிவாலா கிராமத்தில் சர்வே எண் 109ல் உள்ள 8 ஏக்கர் நிலத்தை, சாலை போக்குவரத்துக் கழகத்திடம், ரூ.10 கோடியில் கிடங்கு கட்டும் பணியை, ஒப்படைத்ததாகவும், அதற்கான முன்மொழிவை சமர்ப்பித்ததாகவும் கூறினார். ஆனால் கொரோனா காரணமாக பணிகள் தொடங்கவே இல்லை.
ஜூன் 2022ல், போக்குவரத்து அமைச்சர் பி.ஸ்ரீராமுலு மீண்டும் அழைக்கப்பட்டு, 2010ல் அடையாளம் காணப்பட்ட பழைய இடத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பணிமனை கட்டுவதற்கான பூமி பூஜை செய்தார். இப்போது, இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், பணிகள் முடிவடையாமல் உள்ளது.
அரசு போக்குவரத்து கழக பணிமனையை திறக்கக் கோரி தாலுகா விவசாயி சங்கம் மற்றும் முற்போக்கு அமைப்பினர் பல்வேறு கட்டங்களாக மறியல் உள்பட பல போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, தாலுகா விவசாயி சங்கம் மற்றும் பசுமைப்படை தலைமையில் காலவரையற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சமரசம் பேசிய அதிகாரிகள், 2025 பிப்ரவரிக்குள் பணிமனை பணிகள் முடிந்து, திறப்பு விழா நடத்தப்படும் என உறுதியளித்தனர்.
The post 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் துவங்கப்படாத அரசு போக்குவரத்து கழக பணிமனை: 2025 பிப்ரவரியில் திறப்பதாக அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.