38 கிளைகள், 10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் 78வது ஆண்டு விழா

4 months ago 11

சென்னை: தமிழ்நாட்டின் தலைசிறந்த சிட் பண்ட் நிறுவனமான ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் லிமிடெட், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, ஆதரவுடன் 78வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூர் ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் லிமிடெட் நிர்வாக அலுவலகத்தில், நிறுவனத்தின் 78வது ஆண்டு விழா மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குநர் அரு.ராமசாமி செட்டியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அரு.விஸ்வநாதன், இயக்குநர் அரு.மீனாட்சி வாழ்த்திப் பேசினர். இயக்குநர்கள் அரு.உமாபதி, சித.நடராஜன் தலைமை வகித்தனர்.

முதுநிலை மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக இயக்குநர் அரு.விஸ்வநாதன், இயக்குநர்கள் அரு.மீனாட்சி, அரு.உமாபதி ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டின் தலைசிறந்த சிட் பண்ட் நிறுவனமான ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் 1947ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி சுதந்திரத்துக்கு முன்னர் பதிவு அலுவலகமாக திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. தற்போது நிர்வாக அலுவலகமான பள்ளத்தூரையும் சேர்த்து 38 கிளைகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான சீட்டு திட்டங்களை நம்பகத்தன்மையுடன் வழங்கி வருகிறோம். 15, 20, 25, 30, மற்றும் 50 மாத தவணை திட்டங்களை கொண்டுள்ளது. 78 ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சேவைகளை வழங்கி வருகிறோம். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப எங்களது நிறுவனம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்த படியே தங்களது தவணை தொகையை ஆன்லைன், க்யூஆர் கோட், யுபிஐ, மொபைல் ஆப் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர வாடிக்கையாளர்கள் தங்களது பாஸ்புக், எஸ்எம்எஸ் இன்டிமேசன் இருந்தால் எந்த கிளைகளில் வேண்டுமானாலும் பணம் கட்டலாம். எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை அரசின் சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றி செயல்படுவதே எங்களின் பலம்.

சீட்டு எடுத்த 30 நாளில் வாடிக்கையாளர்களுக்கு காசோலை வழங்கப்பட்டு விடும். மக்களின் தொடர் ஆதரவுடன் 100வது ஆண்டு வெற்றிப்பயணத்தை மேற்கொள்கிறோம். பதிவு பெற்ற சிட் பண்ட் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது’’ என்றார்.

The post 38 கிளைகள், 10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் 78வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article