3 மாதங்களில் காட்டு நாயக்கன் சான்றிதழ் வழங்க நடவடிக்கை: விழுப்புரம் புதிய ஆட்சியர் உறுதி

3 hours ago 1

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று (புதன்கிழமை) பொறுப்புபேற்றுக் கொண்ட ஷேக் அப்துல் ரகுமான், காட்டு நாயக்கன் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பழனி அண்மையில் ஆட்சியர்கள் பணியிட மாற்றத்தின்போது இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியராக நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டார். அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த பத்மஜா மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானின் மனைவியாவார்.

Read Entire Article