
சென்னை,
வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான அதற்கான பணிகளும் நடந்தன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 128-வது வாரியக் கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான புதிய டெண்டர்களை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் படி மாநிலம் முழுவதும் நிறுவப்பட வேண்டும். ஆகஸ்ட் 2023-ல் டெண்டர்களை அழைத்தது, இந்தத் திட்டத்தை வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொகுப்புகளாகப் பிரித்தது. 3கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் கோரப்பட்டது. ஆனால், அதுவும் ரத்து செய்யப்பட்டது.
பிறகு 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்தன. இதில், அதானி நிறுவனம் தான் 4 நிறுவனங்களில் மிக குறைவான தொகையை கூறியிருந்தது. ஆனால், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது.
எனவே, ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 128-வது வாரியக் கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான புதிய டெண்டர்களை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்க பட்டுள்ளது. இதையடுத்து அதற்கான பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது