3 கேப்டன்களுடன் விளையாடும் அதிஷ்டக்காரன் நான்- ஹர்திக் பாண்டியா

3 hours ago 1

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .கடந்த சீசனில் 3 போட்டியில் மும்பை தாமதமாக பந்துவீசிய காரணத்தால் அணியின் கேப்டன் பாண்டியாவுக்கு முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் ரோகித் சர்மா, சூர்யகுமார், பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 பார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

சூர்யகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம். 2 - 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது. அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இம்முறை ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.எனக் கூறினார். 

Read Entire Article