'2கே லவ் ஸ்டோரி' படத்தின் டீசர் குறித்த அப்டேட்

2 months ago 13

சென்னை,

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை சுசீந்திரன் அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 7-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

Read Entire Article