23முதல் 26ம் தேதி வரை நேர்காணல் அஞ்சல்துறை முகவர்கள், கள அலுவலர்கள் சேர்க்கை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

2 weeks ago 3

தஞ்சாவூர், ஏப்3: தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 23,24, மற்றும் 25 ஆகிய தினங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. அதன்படி தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 23ம் தேதியும், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் 24ம் தேதியும், மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் 25ம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது. மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களாக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுவோர், செய்யும் வணிகத்திற்கு ஏற்ப 4முதல் 20சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். வேலை தேடும் இளைஞர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். கள அலுவலர் பதவிக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அதிகாரிகளின் மேல் துறை ரீதியான எந்த வித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படுவோர் ரூ 5000க்கு NSC அல்லது KVP வைப்புத் தொகை செலுத்த வேண்டும். அவர்கள் உரிமம் முடியும் போது வைப்புத் தொகை திருப்பித் தரப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களின் கல்வி தகுதி, வயதுத் தகுதி, இருப்பிடச் சான்று, ஆதார் எண், பான் கார்டு இவற்றிற்கான அசல் மற்றும் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 23முதல் 26ம் தேதி வரை நேர்காணல் அஞ்சல்துறை முகவர்கள், கள அலுவலர்கள் சேர்க்கை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article