2030-ல் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் - ஜெய்சங்கர் நம்பிக்கை

3 weeks ago 5

டெல்லி,

டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:- வரும் 2075-ல் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி சில காலத்துக்கு முன்பு கணித்தது. அதையே கொஞ்சம் குறைவான காலக்கட்டத்தில் நாம் பார்க்கும்போது வரும் 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தொழில்நுட்பம், ஏஐ மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் வளர்ச்சியை பார்க்கும்போது இந்தியாவின் திறன் முக்கியத்துவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகை அதிகம். இங்குள்ள திறனும் அதிகம். அந்த வகையில் யார் முன்னேறுகிறார்கள் என்பது இதில் முக்கியம்" என்றார்.

Read Entire Article