2025ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

1 month ago 4

சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, 2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
எண் பொது விடுமுறை தேதி கிழமை
1 ஆங்கில புத்தாண்டு 1.1.2025 புதன்கிழமை
2 பொங்கல் 14.1.2025 செவ்வாய்க்கிழமை
3 திருவள்ளுவர் தினம் 15.1.2025 புதன்கிழமை
4 உழவர் திருநாள் 16.1.2025 வியாழக்கிழமை
5 குடியரசு தினம் 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை
6 தைப்பூசம் 11.2.2025 செவ்வாய்க்கிழமை
7 தெலுங்கு வருடப் பிறப்பு 30.3.2025 ஞாயிற்றுக்கிழமை
8 ரம்ஜான் 31.3.2025 திங்கட்கிழமை
9 வங்கிகள்
ஆண்டு கணக்கு முடிவு 1.4.2025 செவ்வாய்க்கிழமை
10 மகாவீரர் ஜெயந்தி 10.4.2025 வியாழக்கிழமை
11 தமிழ்ப் புத்தாண்டு /
அம்பேத்கர் பிறந்த தினம் 14.4.2025 திங்கட்கிழமை
12 புனித வெள்ளி 18.4.2025 வெள்ளிக்கிழமை
13 மே தினம் 1.5.2025 வியாழக்கிழமை
14 பக்ரீத் 7.6.2025 சனிக்கிழமை
15 மொகரம் 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை
16 சுதந்திர தினம் 15.8.2025 வெள்ளிக்கிழமை
17 கிருஷ்ண ஜெயந்தி 16.8.2025 சனிக்கிழமை
18 விநாயகர் சதுர்த்தி 27.8.2025 புதன்கிழமை
19 மிலாது நபி 5.9.2025 வெள்ளிக்கிழமை
20 ஆயுத பூஜை 1.10.2025 புதன்கிழமை
21 விஜயதசமி 2.10.2025 வியாழக்கிழமை
22 காந்தி ஜெயந்தி 2.10.2025 வியாழக்கிழமை
23 தீபாவளி 20.10.2025 திங்கட்கிழமை
24 கிறிஸ்துமஸ் 25.12.2025 வியாழக்கிழமை

* 1.4.2025 அன்றைய அரசு விடுமுறை என்பது, தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
* அதிகபட்சமாக ஜனவரி மாதம் 5 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.
* நவம்பர் மாதம் அரசு விடுமுறையே இல்லை.
* இதுதவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் விடுமுறை தினங்களாகும்.

The post 2025ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article