2023-ம் ஆண்டில் திருச்சி சாலையில் நடந்த விபத்தில் இறந்த கௌதமின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 கோடி வழங்க உத்தரவு

4 weeks ago 8

நாமக்கல்லில் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருச்சி சாலை நாகராஜபுரத்தில் நடந்த சாலை விபத்தில் அபுதாபியில் பணியாற்றிய பொறியாளர் கௌதம் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று இருந்த நிலையில் திடீரென மரணம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சமரசம் ஏற்பட்டு இறந்த கௌதமின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 கோடி வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

தமிழகத்தில் முதன்முறையாக சமரசத் தீர்வில் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி இழப்பீட்டுக்கான ஆணையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினார். விபத்தில் இறந்த பொறியாளர் கௌதம் அபுதாபியில் மாத ஊதியமாக இந்திய மதிப்பில் 3.25 லட்சம் வாங்கியதை, அடுத்து இழப்பீட்டுத் தொகை அதிகம் கிடைக்க காரணமாக இருந்துள்ளது.

The post 2023-ம் ஆண்டில் திருச்சி சாலையில் நடந்த விபத்தில் இறந்த கௌதமின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 கோடி வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article