டெக்சாஸ்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் விண்கலம் நடுவானில் வெடித்துச்சிதறியது. அமெரிக்காவின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் தனியாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஸ்டார்ஷிப் விண்கலம் நேற்று முன்தினம் இரவு ஏவப்பட்டது. பயிற்சிக்காக இந்த விண்கலத்தில் 10 மாதிரி செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு இருந்தன.
திட்டமிடப்பட்டபடி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் திடீரென தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது. இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளன. ஸ்டார்ஷிப் விண்கலம் விண்ணில் பறக்கத்தொடங்கிய உடனேயே கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல்அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில்,’ வெற்றி என்பது நிச்சயமற்றது. ஆனால் பொழுதுபோக்கு உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியது appeared first on Dinakaran.