அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

3 hours ago 2

வாஷிங்டன்: தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான சந்தா நகரில் பிறந்த சாய் வர்ஷித் கந்துலா, கிரீன் கார்டுடன் அமெரிக்காவில் சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இருந்தார். 2023 மே மாதம் 22ம் தேதி மதியம் மிசோரியின் செயிண்ட் லூயிஸிலிருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் சென்றுள்ளார். அன்று இரவு 9.35 மணிக்கு வெள்ளை மாளிகை மற்றும் அதிபர் பூங்காவைப் பாதுகாக்கும் தடுப்புகள் மீது லாரியால் மோதி உள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர். லாரியை விட்டு கீழே இறங்கிய கந்துலா, ஒரு பையிலிருந்து, நாஜி கொடியை வெளியே எடுத்து அதை அசைத்துக் காட்டி உள்ளார். அமெரிக்க பூங்கா காவல்துறை மற்றும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள், சம்பவ இடத்தில் கந்துலாவைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி டாப்னி எல் பிரீட்ரிக், இந்திய வம்சாவளி கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

The post அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Read Entire Article