
சென்னை,
2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 14ம் தேதி ரீ-ரிலீஸ் ஆனது. இந்நிலையில், 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைநதிருக்கிறது.
அதன்படி, நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் ரவிமோகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'எனது திரைப் பயணத்திலேயே மைல் கல்லாக விளங்கும் படம் ரீ-ரிலீஸாகியிருப்பது மகிழ்ச்சி' என தெரிவித்திருக்கிறார்.