ராஞ்சி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த வாரம் ஜார்கண்டிற்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். 14ம் தேதி ராஞ்சி வரும் ஜனாதிபதி, மறுநாள் பிஐடி மெஸ்ரா நிறுவனத்தின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதி வருகையொட்டி ஜார்கண்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ராஞ்சி துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்திரி தெரிவித்தார். விமான நிலையம், ராஜ்பவன் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நோடல் அதிகாரிகள் மற்றும் உதவி நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியின் போக்குவரத்துப் பாதையில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள் மற்றும் உணர்திறன் வாய்ந்த இடங்களைக் கண்டறிந்து விரிவான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.