சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு நேற்று மருந்து பெட்டகங்களை வழங்கியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்பின் விருது என சாதனை சரிதம் எழுதிவரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு இன்று (நேற்று) மருந்து பெட்டகங்களை வழங்கினேன்.
மருத்துவமனைகளை நாடிச் செல்லவோ, வீட்டுக்கு மருத்துவர்களை வரவழைக்கவோ வசதியில்லாத எண்ணற்றோருக்கு வீடுதேடிச் சென்று ‘பிசியோதெரபி’ அளித்து வாழ்வில் ஒளியேற்றும் சாதனையையும் சத்தமின்றி படைத்து வரும் இத்திட்டத்தின் வெற்றிக்கு காரணமான 14 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் மருத்துவ பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.