திருத்துறைப்பூண்டி, மே 20: திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் செல்லம்மா காளியம்மன் கோயில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. செல்லம்மா காளியம்மன் கோயல் சித்திரை திருவிழா 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ரத காவடி ஆட்ட நிகழ்ச்சியும் அன்னதானமும் எட்டாம் நாள் அம்பாள் வீதியுலா உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் செல்லம்மா காளியம்மன் கோயிலில் அம்பாள் வீதியுலா appeared first on Dinakaran.