தஞ்சாவூர், மே 20: மக்கள் குறைதீர் கூட்டத்தில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசை கலெக்டர் பிரியங்கா பங்க்ஜம் வழங்கினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.பின்னர், மாவட்ட கலெக்டர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற் றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள்.தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர் சுரேஷ் என்பவருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.50,000 க்கான புதிய செட்டாப் பாக்ஸினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவ ட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர். மாவட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சபீர் பானு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டம்: கட்டுரை, பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் appeared first on Dinakaran.