2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

3 hours ago 3

சென்னை,

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோடை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக வடமேற்கு ரெயில்வே திருச்சிக்கு வந்து செல்லும் 2 ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, வண்டி எண். 22497/22498 ஸ்ரீ கங்காநகர் - திருச்சி ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 5-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையும் (திங்கட்கிழமைகளில்), திருச்சி- ஸ்ரீகங்காநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் (வெள்ளிக்கிழமைகளில்) தற்காலிகமாக ஒரு ஏ.சி மூன்று அடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

வண்டி எண். 20481/20482 ஜோத்பூர் - திருச்சி - ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்காலிகமாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். இந்த ரெயில்கள் வருகிற மே 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை (புதன்கிழமைகளில்) மற்றும் வருகிற 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (சனிக்கிழமைகளில்) இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article