திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் படிக்காசு வழங்கும் திருவிழா

4 hours ago 2

திருவாரூர் மாவட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம், திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய சிறப்புக்குரிய தலம் ஆகும்.

முற்காலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தில் தங்கி பதிகங்கள் பாடி வழிபட்ட நேரத்தில், பஞ்சம் தாண்டவமாடியது. அப்போது சிவ தொண்டர்களுக்கும் மக்களுக்கும் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையை கண்டு வருந்திய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தல இறைவனிடம் பஞ்சம் போக்க வழி கேட்டனர். சிவனடியார்களின் பசியையும் மக்களின் பசியையும் போக்கும்படி வேண்டுகோள் வைத்தனர்.

இதை அறிந்த இறைவன் வீழிநாதர் திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் படிக்காசு வழங்கி பசியை போக்கிட பணித்தார். படிக்காசை கொண்டு சிவனடியார்களுக்கும் மக்களுக்கும் பஞ்சம் போக்கியதாக வரலாறு கூறுகிறது

இதன் நினைவாக இன்று இறைவன் படிக்காசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் காலை 10 மணி அளவில் சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசருக்கு அலங்காரம் செய்து வீதியுலா நடைபெற்றது. பின்னர் இறைவன் இவர்களுக்கு படிக்காசு கொடுத்த இடத்தில் (கோவில் எதிரே) சிறப்பு பூஜை செய்து படிக்காசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் சார்பில் படிக்காசு வழங்கிய பீடத்தில் தங்களால் இயன்ற காசுகளை வைத்து வணங்கினர்.

Read Entire Article