2 இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

3 hours ago 1

வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் நான்கு பேர் கொண்ட குழுவை அணுகிய ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார் . இந்த துப்பாக்கி சூட்டில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் பலியானார்கள். பலியானவர்களில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதற்கு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. சம்பவத்தை தொடர்ந்து ஒருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். விசாரணையில் அவர் சிகாகோவை சேர்ந்த எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்படுவதற்கு முன்பாக அந்த நபர்கள் அருங்காட்சியகம் வெளியே சுற்றி திரிந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலிய தூதரகங்கள் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளன.

The post 2 இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article