திருச்சி மாவட்டம் லால்குடியில், 15 வயது சிறுமியை திருமணம் செய்த கார்த்திக் என்ற இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதற்காக கார்த்திக் என்பவர் பெண் கேட்டபோது, சிறுமியின் வயதை காரணம் காட்டி பெற்றோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கார்த்திக் தனது மகளை கட்டாயத் திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.